வேலை செய்யும் போதுதான் அதன் சிரமம் புரியும்.. சிண்ட்ரெல்லாவின் மாயக் கோலால் 2 வருடத்தில் நாட்டை கட்டமைக்க முடியாது..

நாடொன்றை நிர்வகிப்பதும் அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துவதும் எத்தகைய கடுமையான சவால் என்பதை அரசாங்கத்தை நடத்தும் தரப்பினர்தான் நன்கு உணர்ந்துள்ளனர் என்றும், கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக சீரழிந்த நாட்டை ஒரே இரவில் மாயக் கோல் கொண்டு மாற்றியமைக்க முடியாது என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறையில் (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் சாதாரண பாதையொன்றை திருத்துவதற்குத் தேவையான தார் தொகையைக் கூடப் பெற்றுக்கொள்வது கூட மிகக் கடினமான பணியாக மாறியுள்ளது சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எழுப்பும் குற்றச்சாடுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:
“இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அரசாங்கம் என்ன செய்தது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சிண்ட்ரெல்லாவின் மாயக் கோலை அசைத்தது போல் இரண்டே ஆண்டுகளில் எல்லாவற்றையும் உருவாக்கிவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், 76 ஆண்டுகளாக மக்களைப் படுத்தியெடுத்த சீர்குலைந்த பொருளாதாரமும் சமூகமுமே எங்களுக்கு வசுமாகக் கிடைத்துள்ளன. அதுவிருக்கட்டும், இந்த நாட்களில் ஒரு பாதைக்கு இடத் தார் தேடுவது கூட எளிதல்ல. சும்மா பார்த்துக் கொண்டிருக்கும் எவரும் எதையும் கேட்கலாம். ஒரு பணியில் ஈடுபடும் போதுதான் அதிலுள்ள உண்மையான சிரமம் புரியும். எதையும் செய்யாமல் மௌனமாக இருப்பது மிகவும் எளிது, அப்போது விமர்சனங்களையும் கேட்க வேண்டியிராது.”
கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முன், பொதுமக்களிடம் உள்ள உயரிய எதிர்பார்ப்புகளையும் அடிமட்டத் தளத்தில் உண்மையாக நிலவும் வளங்களின் எல்லைகளையும் நிர்வகித்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக அரச நிதிப் பற்றாக்குறை, கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் உள்ள தாமதங்கள் காரணமாக நாடு முழுவதும் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு மூலப்பொருள் பற்றாக்குறை கடுமையாகப் பாதித்துள்ளது. அரசியல் வாக்குறுதிகளையும் உடனடித் தீர்வுகளையும் தேடுவதை விட, நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதில் நிலவும் நடைமுறை மற்றும் கட்டமைப்பு ரீதியான தடைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் இவ்வாறு முற்பட்டுள்ளனர் என கூறினார்.



