News

பட்ஜெட் 2027  🔸🔹

பட்ஜெட் 2027  🔸🔹

ஸ்ரீலங்கன் விமான சேவையின் செலவுகளைத் தொடர்ந்து ஏற்கும் நிதி ஆற்றல் அரச திறைசேரிக்கு உள்ளதா என்பதை ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கைக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கையின் எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிப்பு – நிவாரண மானியங்களுக்காக 147 பில்லியன் ரூபா செலவு – ஜனாதிபதி

* 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 7 மூலோபாயத் திட்டங்கள் : அவசரத் தேவைகளுக்காக திறைசேரியில் நிதி இருப்பு அவசியம் – ஜனாதிபதி

* 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்: முதலீட்டுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்படும்: வரவு – செலவுப் பற்றாக்குறையை 5 சதவீதத்திற்கும் குறைவாகப் பேண இலக்கு – ஜனாதிபதி

* முதலீடுகளை ஊக்குவிப்பதையும், முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான நாடாக இலங்கையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு விசேட நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது . – ஜனாதிபதி அநுரகுமார

* முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்..

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் – ஜனாதிபதி

* 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்காக 2 டிரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.1 சதவீத அதிகரிப்பாகும்.

முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய நிவாரணப் பொதியொன்றும், அதற்கான நிறுவனமொன்றும் உருவாக்கப்படவுள்ளன.

அத்துடன், இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய ஆணையமொன்றும் நிறுவப்படவுள்ளது.

* இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

அத்துடன், சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானுடன் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரப் பங்காண்மை ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. – ஜனாதிபதி

* கூரை சூரிய மின்சக்தி பயனாளர்களுக்கு மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ 3.5 பில்லியன் ரூபா நிவாரணம்

கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைப் பயன்படுத்துவோர் மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில் 3.5 பில்லியன் ரூபா நிவாரணப் பொதியை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இதன்படி, புதிதாக வீடுகளில் கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை நிறுவும் பயனாளர்களுக்கு, நிறுவப்படும் ஒவ்வொரு 1 கிலோவாட் மின்கல சேமிப்புத் திறனுக்கும் 25,000 ரூபா நிதி ஊக்குவிப்பு வழங்கப்படும்.

அதிகபட்சமாக 10 கிலோவாட் திறன் கொண்ட மின்கல சேமிப்பு கட்டமைப்புகளுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுவதுடன், ஒரு வீட்டுக்கு அதிகபட்சமாக 250,000 ரூபா நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும்.

* இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை (PAL) நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வரி விலக்கு மூலம் வீடுகளுக்கு மேலதிக செலவுச் சலுகை கிடைக்கும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒரு கிலோவாட் மின்கலத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button