News

எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் சம்பளப் பிரச்சினைக்கு வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) தீர்வு காண முடியாது – அமைச்சர் லால்காந்த

எவ்வளவு போராட்டங்களை முன்னெடுத்தாலும், சம்பளப் பிரச்சினைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வு காண முடியாது என விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கே.டி. லால்காந்த,

“அரச சேவையின் சம்பளம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண முடியாது. அதற்காகவே சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உங்களது பிரச்சினைகளைச் சம்பள ஆணைக்குழுவிடம் வழங்குங்கள். எவ்வளவுதான் வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடத்தினாலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஆகவே, தற்போதுள்ள பிரச்சினைகளைச் சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பியுங்கள். அந்தப் புத்திசாலித்தனம் தொழிற்சங்க இயக்கத்திற்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்கு அரச சேவையாளர்களும் பாரிய அர்ப்பணிப்பைச் செய்தார்கள். தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். அது எமது கோரிக்கையும் கூட. எமது போராட்டக் கோஷமாகவும் இருந்தது. அதற்காக நாம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தோம், சுவரொட்டிகளை ஒட்டினோம், போராட்டங்களை நடத்தினோம்.

போதும் போதும் என்கிற அளவிற்குக் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளானோம். தடியடிகளையும் நன்றாக வாங்கியுள்ளோம். அவை அனைத்தையும் செய்துள்ளோம். அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன, இன்னும் எதுவும் நடக்கவில்லை. நானும் அதனைக் கூறுகிறேன். ஆனால், எதிர்காலத்திலும் அதற்கான நம்பிக்கை இல்லை.” எனத் தெரிவித்தார்.

#HiruNews #HiruNewsLK #TruthAtAllCosts

Recent Articles

Back to top button