News

இலங்கை ஆசியாவில் முதலிடத்திற்கு வந்துள்ளது.. உலகளவில் வர்த்தக முத்திரையாக (பிராண்ட்) மாற்றிக் கொண்டிருக்கிறோம்..- மாலிமா நாடாளுமன்ற உறுப்பினர்

கடந்த காலப்பகுதியில் நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியான சூழ்நிலைக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்க முடிந்ததோடு மட்டுமல்லாமல், ஆசியாவிலும் உலக அளவிலும் முன்னணி வர்த்தக முத்திரையாக (பிராண்ட்) மாறும் அளவுக்கு அனைத்து குறியீடுகளிலும் நாடு படிப்படியாக முன்னேறி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் வரவு-செலவுத் திட்ட அறிக்கைகளின் ஊடாக நாட்டுக்காக ஆற்றிய பங்களிப்பு என்னவென எதிர்க்கட்சி எழுப்பி வரும் கேள்விகளுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து நாட்டை நிலையான பாதையில் வழிநடத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த,

“கடந்த இரண்டு ஆண்டுகளில் வரவு-செலவுத் திட்டத்தில் என்ன செய்தீர்கள் எனக் கேட்கும் எதிர்க்கட்சிக்கு எமக்குக் கூறவுள்ள பதில் என்னவென்றால், இலங்கையில் இருந்த மோசமான நெருக்கடியான நிலைமைக்கு ஆக்கபூர்வமான தீர்வைப் பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல்; இன்று ஆசியாவிலிருந்து மேலே வந்து, உலகின் முன்னணி வர்த்தக முத்திரையாக மாறும் அளவுக்குத் தொடர்புடைய பொருளாதார மற்றும் சமூகக் குறியீடுகளில் எமது நாடு படிப்படியாக முன்னேறி வருகிறது.”

Recent Articles

Back to top button