News

பழைய மாணவர்களுடன் புது யுகம் நோக்கி …. பறகஹதெனிய தேசிய பாடசாலையின்  பழைய மாணவர் வகுப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு – 2024

பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் நடாத்திய பழைய மாணவர் வகுப்புப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு (Batch Representatives meeting) 15/12/2024 ,ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை பறகஹதெனிய அரஃபா வரவேற்பு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

32 பழைய மாணவர் வகுப்புக்கள் சார்பில் 71 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பல்வேறு விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்தி பல கண்டுபிடிப்புகளுக்கு உரிமை கோருபவரும் பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான Dr.Ajmal Abdul Azees பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதும் பழைய மாணவர் சங்கம் சார்பில் அவரது அடைவுகளைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் விசேட அம்சமாய் திகழ்ந்தன .

இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தை வலுவூட்டலின் அவசியம் மற்றும் அதன் பிரதிபலன்கள் குறித்த பிரதான காரணிகள் பழைய மாணவர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டதுடன் பாடசாலை கேட்போர் கூடத்துக்கான கதிரைகள்,ஒலி பெருக்கி வசதிகள் மற்றும் பாடசாலை மேள வாத்தியக்குழுவை கட்டமைத்தல் ஆகிய செயல் திட்டங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம் பெற்றன.மேலும் பழைய மாணவர் வகுப்புக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்துவதற்கான ஆரம்ப கட்ட முன்மொழிவுகளும் இவ்வொன்று கூடலின் போது முன்வைக்கப்பட்டன..

பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் புத்தளம் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுபவருமான Rimzan Amanullah ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து இந் நிகழ்வைச் சிறப்பித்தனர்..

தலைமையுரையை நிகழ்த்திய பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவரும் பாராளுன்றத்தின் பிரதிப் பிரதான  அலுவலருமான சகோ.S.A.M.Saheed தனது உரையில் பழைய மாணவர் சங்கம் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் செயல் திட்டங்கள் குறித்தும் விளக்கங்களை வழங்கினார்.

Dr.Ajmal Abdul Azees க்கான பாராட்டுரையை நிகழ்த்திய சகோ.Rimzan Amanullah Dr.Ajmal  கடந்து வந்த பாதை குறித்த சில ஞாபகங்களை மீட்டியதுடன் சாதனையாளர்களைப் பாராட்டுவதற்கான முனைப்புகள் மட்டுமன்றி சாதனையாளர்களுக்கு வழிகாட்டுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதிலும் எமது சமூகம் ஆர்வம் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Dr.Ajmal Abdul Azees தனது உரையில் பாடசாலையின் முன்னேற்றம் குறித்தான நீண்டகாலத் திட்டமிடல்கள் குறித்து பாடசாலை சமூகம் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதற்கான ஒரு சில உதாரணங்களையும் முன் வைத்தார்.மேலும் வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான பல்வேறு வாய்ப்புகள் காணப்படுவதை சுட்டிக்காட்டிய அவர் அவற்றின் பாலும் மாணவர்கள் நெறிப்படுத்தப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் போது செயலாளர் Fahim Amanullah கேள்விகளுக்கான பதில்களை வழங்கியதுடன் 77 வருட வரலாற்றைக் கொண்ட எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் பழைய மாணவர் சங்கத்தின் கீழ் ஒன்று பட்டால் சாதனைகள் படைப்பதெல்லாம் சர்வ சாதாரணமான விடயங்கள் என்று குறிப்பிட்டதுடன் இந்த ஒன்று கூடல் பழைய மாணவர் சங்கத்தின் பிரகாசமான எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்திருப்பதாவும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button