News
டிரம்பை வீழ்த்துவோம் – புதிய ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ் சூளுரை
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் தற்போது தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்து கமலா ஹரிஸை முன்னிறுத்தினார்.
கமலா ஹரிஸுக்கும் பல்வேறுபட்டோர் ஆதரவளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஹரிஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் உள்ளிட்டோரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசி ஆதரவு திரட்டி வருகின்றார்.
மேலும், இந்த தேர்தலில் தன்னை முன்னிறுத்தியதற்காக ஹரிஸ் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து, ஜனநாயக கட்சியை ஓரணியாக திரட்டி, இந்த தேர்தலில் டிரம்பை தோற்கடித்து வீழ்த்திக் காட்டுவோம் என்று சூளுரைத்துள்ளார்