News

இலங்கையை வந்தடைந்துள்ள ரோகிங்கிய மக்களுக்கு பொருத்தமான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட  அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்து வருகிறோம் ; பிரதியமைச்சர்

ரோகிங்கிய மக்களுடன் அக்கறையுடன் இருக்கிறோம் _வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ரோஹிங்கிய பிரஜைகள் 103 நபர்கள் இங்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருக்கிறார்கள்  அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் கேமசந்திரா தெரிவித்தார்.

சுகாதார நிருவாக பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சு உட்பட பலர்  இணைந்து செயற்படுகிறோம். சிறப்பாக எங்கள் விடயங்களை அணுகி வருகிறோம் ஒரு சிலர் இதனை வைத்து அரசியல் செய்கின்றனர் இதனை ஒரு போதும் ஏற்க முடியாது

திருகோணமலையில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட ரோகிங்யவர்களினை பார்வையிட்டதன் பின் இவ்வாறு இன்று (22)ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்.

மக்களுக்கு உடல் உள ரீதியாக எந்த தாக்கமும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து மனிதாபிமான ரீதியாக பாதுகாத்து வருகிறோம் அத்துடன் அவர்களுக்கு பொறுத்தமான உணவு வகைகளை வழங்கி வருகிறோம்.

பொருட்களை மாத்திரம் வழங்கினால் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற மன நிலை நீங்கி இந்த விடயத்திலும் செயற்படுகிறார்கள்.

அரசாங்கம் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என சில அரசியல்வாதிகள்  கருத்துக்களை பதிவேற்றியிருந்தனர். இம்மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமாக இருந்தால் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் ஊடாக உதவி செய்யுங்கள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அனைத்து விடயங்களையும் முன்னெடுத்துள்ளோம் குறித்த மக்களை நாளை அல்லது நாளை மறுதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைப்போம்  இதனை வைத்து அரசியல் செய்யாமல் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button