News
கோட்டை பழைய பொலிஸ் தலைமையக கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் திருட்டு
கோட்டை பழைய பொலிஸ் தலைமையக கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏழு சி.சி.ரி.வி கெமராக்கள் மற்றும் டி.வி.ஆர் இயந்திரம் என்பன திருடப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் கட்டடப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று (2) முறைப்பாடு செய்துள்ளார்.
திருடப்பட்ட உபகரணங்களின் மதிப்பு சுமார் 4 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது