News
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் இரு கருப்பு ஆடுகள் இருப்பதாக பாராளுமன்றில் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ரணிலுக்கு ஆதரவளிக்கும் இருவரின் பெயர்களை குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார்.
சரத் பொன்சேகாவும் ராஜித சேனாரத்ன மட்டுமே ரணிலுக்கு ஆதரவாளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்விருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நீரோட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல எனக் கூறிய துஷார இந்துனில், நாம் நினைப்பதை போல அவர்கள் சிந்திப்பதில்லை என்றார்.
அவர்கள் இருவரும் இப்போது ஒரு குழாயின் உள்ளே மாட்டிக்கொண்டு அந்த வழியில் செல்கிறார்களா? என்றும் துஷாரா இந்துனில் கேள்வி எழுப்பினார்.

