News

திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா மீண்டும் தேசிய வைத்தியசாலையில் அனுமதி.

கொழும்பு  வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா, இன்று காலை தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா, பாரத லக்‌ஷ்மன் படுகொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, கோட்டாபயவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை பெற்றிருந்தார்.

எனினும் கடந்த 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் மீண்டும் கைது செய்யப்பட்ட அவர், நீண்ட காலமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ நிபுணர்கள் பரிந்துரையின் பேரில் நேற்று மாலை அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button