News

குழந்தையை பெற்றெடுத்து கிணற்றில் வீசிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட தாய் கைது

யாழ்ப்பாணம் கைதடி முருகமூர்த்தி கோவில் பகுதியில் பரிதாபகரமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பிறந்த குழந்தையின் சடலம் தொப்புள் கொடியுடன் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது.

கிணற்றுக்குள் குழந்தை இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே வேளை சாவகச்சேரி காவல் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டலில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சிசுவைப் பிரசவித்தவர் எனச் சந்தேகிக்கப்படும் 43வயதான 3பிள்ளைகளின் தாயான பெண் கிளிநொச்சி பகுதிக்குத் தப்பிச்செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கொலைக்கு உதவியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரியையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button