News

வங்குரோத்தடைந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்- ஜனாதிபதி

வலுவான பொருளாதாரம் கொண்ட நாட்டை தேசிய மக்கள் சக்தி பெறுப்பேற்கவில்லை என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

பொருளாதாரம் நன்றாக இருந்திருந்தால் அரசாங்க அதிகாரத்தை எமக்கு வழங்கியிருக்கமாட்டார்கள் பொருளாதாரம் நன்றாக இருந்திருந்தால் அரசாங்கத்தை எடுத்தும் இருக்கமாட்டோம். நாமும் ஒரு ஓரத்தில் ஆதவளித்து இருந்திருப்போம்.

பொருளாதார சரிவு,கடனை அடைக்க முடியாத நாடு, கையிருப்பு இல்லாத நாடு.ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், மின்சாரம், எரிவாயு இன்றி, மக்கள் தெருக்களில் கதறி அழுத நாடு , கடனை அடைக்க முடியாத நாடு,அனைத்து வருமான ஆதாரங்களும் சரிந்த நாட்டை நாம் பொறுப்பேற்றோம்.

ஏதோ பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டை நாம் பொறுப்பேற்றது போல் இன்று சிலர் விமர்சிக்கிறார்கள்..

ஆனால் எமது ஆட்சியில் முன்னரை போன்ற ஒரு நிலமை உருவாக ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button