ஒரு வாகனம் மாத்திரம் போதும் என்றார்கள் ஆனால் பிரதி அமைச்சருக்கு 3 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன ; டி வி சாணக

கடந்த அரசில் 20 கெபினட் அமைச்சர்கள் மற்றும் 38 இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த வாகனங்கள் 426 எனவும் நேற்று ஜனாதிபதி காரியாளயம் வெளியிட்ட தகவல்களில் படி NPP அரசில் 19 கெபினட் அமைச்சர்கள் மற்றும் 28 பிரதி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த வாகனங்கள் 414 என முன்னாள் அமைச்சர் டி வி சானக குறிப்பிட்டார்.
முன்னர் அமைச்சருடன் மூன்று பேருக்கு தொலைபேசி கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் தற்போது அது 15 ஆக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
முன்னர் ஒரு லீட்டருக்கு 4 கிலோமீட்டர் ஓடும் வாகனத்திற்கு 500 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும் தற்போது கெப் வாகனம் ஒன்றுக்கு பிரதி அமைச்சருக்கு 900 லீட்டர் எரிபொருள் பெறும் விதத்தில் சட்டமூலம் திருத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டி வி சானக குறிப்பிட்டார்.
ஒரு வாகனம் எடுப்பதாக கூறினர் ஆனால் பிரதி அமைச்சருக்கு 3 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.



