NPP ஒரு திறமையான கட்சி. நாம் ஒரு சிக்கலைக் கண்டால்,அந்தப் பிரச்சனைக்கான பதில்களை விரைவாகக் கண்டுபிடிப்போம்.

அரிசி பிரச்சினைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான தீர்வுகள் இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி துஷாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“தேசிய மக்கள் சக்தி ஒரு திறமையான கட்சி. நாம் ஒரு சிக்கலைக் கண்டால், அந்தப் பிரச்சனைக்கான பதில்களை விரைவாகக் கண்டுபிடிப்போம். அரிசி தட்டுப்பாட்டுக்கு எங்களால் திறம்பட பதிலளிக்க முடிந்துள்ளது.அதற்கான திட்டம் தயாரிக்கப்படாததே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம்.
கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் 30 அரிசிக் கிடங்குகளை இராணுவத்தினர் சீர்செய்துள்ளனர். கைவிடப்பட்ட 209 நெல் களஞ்சியசாலைகளை சரிசெய்து பயன்படுத்துவோம் என நம்புகிறோம்.அரிசியை சேமித்து வைக்க முடியாவிட்டால் வெறும் அரிசியை உற்பத்தி செய்து பயனில்லை. நெல் உற்பத்தியாளர்களிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யும் திட்டம் வேண்டும் என கூறினார்.



