News

மகிந்தவுடன் தொடர்புள்ளவர்களை கைது செய்வதற்கான சதிகள் இடம்பெறுவதாக சொக்கா மல்லி தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பு விஜேராம வீதியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், சிலிண்டர் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிரேமலால் ஜயசேகர,

தற்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான சதிகள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் மேலும் பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பிரேலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button