News

ரணில் விக்ரமசிங்கவின் மூன்றாவது பட்ஜெட்டை தான் இன்று அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டு உள்ளார் ; கபீர் ஹஷீம்

சிந்தனை மாற்றத்தை நாடு எதிர்பார்த்தது எனவும்  முன்னைய பொருளாதார மாதிரி 76 வருடங்களாக தோல்வியடைந்து விட்டதாகவும், இந்த நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறியவர்கள்

முன்னாள்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களின் கீழ் இவை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி அனுரகுமார ஏற்றுக்கொண்டுள்ளர்.

மற்றும்  ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மாற்றச் சட்டமே  திருத்தப்பட்டுள்ளது, மேலும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் மற்றும் திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட எண்ணெய் களஞ்சியங்களை இந்தியாவுக்கு வழங்குவதையும் அவர் தற்போதய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். 

அப்படியென்றால், எழுபத்து நான்கு வருடங்கள் நாட்டில் நல்லதே நடந்துள்ளது என்று இன்றைய ஜனாதிபதி உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சுங்கத்தில் புதிய திருத்தப்பட்ட சுங்கச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் இருபது வருடங்களாக முயற்சித்தோம் ஆனால் ஜே.வி.பியின் தொழிலாளர் குழுவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனால் இன்று ஜனாதிபதி சுங்கச் சட்டத்தை புதிதாகக் கொண்டு வர வேண்டும் என்றும் புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதாகவும் கூறுவதால் 60 வருடங்களின் சாபத்தின் பின்னணியில் அவர்  இருக்கின்றார் என தெளிவாகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button