News
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து செல்பி எடுத்த வெளிநாட்டுப் பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடிமனிக்கே ரயிலில் இருந்து இன்று (20) காலை தவறி விழுந்து ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹலிலெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ரயில் சுரங்க பாதையை கடந்து அமுனுவெல்பிட்டிய பகுதியில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது குறித்த பெண் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் அதே ரயிலில் ஹாலி எல ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிலெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா



