News
மொட்டு தனியாக செல்வது ரனில் – மஹிந்தவின் கேம் ?
வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை ரனில் பெற்றுக்கொள்ள இருக்கும் தடையை நீக்க மொட்டு தனி வேட்பாளரை நிறுத்தியுள்ளதா என தனக்கு சந்தேகம் உள்ளதாக பிவிதரு ஹெல உருமய கட்சி தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
ராஜபக்ஷக்கள் இருக்கும் அணிக்கு வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஒரு பயம் இருப்பதால் மொட்டின் முழு அணியையும் ரனிலோடு அனுப்பி விட்டு ராஜபக்ஷக்கள் தனி வேட்பாளரை இறக்கியுள்ளதா என சந்தேகம் உள்ளதாக அவர் கூறினார்.