ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற அமைச்சர்கள், எம்.பிக்கள் சிலர் உண்மையிலேயே நிதி சிக்கலில் உள்ளனர் – அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் ; எஸ்.பி திசாநாயக்க
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற அமைச்சர்கள் சிலர் உண்மையில் நிதி சிக்கலில் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
10 இலட்சம், 20 இலட்சம், 30 இலட்சம் என எம்.பி., பெற்றுக் கொண்டதாகவும், அவர்களுக்கு ஆதரவளிப்பது நல்லது எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் : “சில அமைச்சர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 300, 400 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டனர் அது பிழை அது பணத்தை துஷ்பிரயோகம் வெய்வதந்கு சமம்.
பணம் வைத்திருக்கும் அமைச்சர்களும் அங்கிருந்து பணத்தை எடுத்துள்ளனர். அந்த நிதியில் இருந்து நான் ஐந்து சதத்தை எடுக்கவில்லை எனவும், ஆனால் இதயநோயாளிகளுக்காக தலையிட்டு சிறுநீரக நோயாளர்களுக்கான நிதியில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்த எம்.பி., அந்த நிதியில் இருந்து சாமானியர்களுக்கு மெதுவான முறையில் பணம் விடுவிக்கப்படுவதாகவும்” தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நிதியில் இருந்து சில தினங்களில் பணத்தை விடுவிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், அதற்கு அவர் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்