News
பெண்களே உலகத்தை மாற்றக்கூடியவர்கள் : சமன்மலி குனசிங்க

பெண்களே உலகத்தை மாற்றக்கூடியவர்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி ரனசிங்க கூறினார்.
தொலைக்காட்சி நிகழ்சியில் கருத்து வெளியிட்ட அவர்
“பெண்களே உலகத்தை மாற்றக்கூடியவர்கள். ஆண்கள் ஒரு வேலை செய்யும் போது பெண்களான எம்மால் நூறு வேலைகளை செய்ய முடியும்.அதனை வீட்டில் உள்ள தாய் , மனைவி ,சகோதரி வீடுகளில் செய்து காட்டியுள்ளனர்.
சிறந்த ஒரு நாட்டை உருவாக்குவதே எமது நோக்கம் அதற்காக உங்களுக்குள் புதைந்துள்ள திறமைகளை எம்மோடு பகிர்ந்துகொள்ள் முன்வாரவேண்டும்” என கூறினார்.
இந்த நாட்டை சுபீட்சமாக்க உங்களது பங்களிப்பு மிக அவசியம் என கூறிய அவர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை அதற்கு இரு களமாக பயன்படுத்த வேண்டும் எனவும் பெண்களுக்கான பூரன உதவிகளை செய்ய அரசு தயார் எனவும் அவர் கூறினார்.



