அனுரகுமார ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் அசாதாரண விடயங்கள் அரங்கேறுகிறது – அநுர அரசாங்கம் விழிப்படைய வேண்டும்

கலாபூஷணம் பரீட் இக்பால்
அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் அசாதாரண விடயங்கள் அரங்கேறுகிறது. அனுர அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சி கொண்ட அதிருப்தி குழு ஒன்று இயங்குவதாக சந்தேகம் நிலவுகிறது.
நாட்டில் பாதாள உலக கோஷ்டியின் ஷேட்டைகள் அதிகரித்திருக்கிறது.
மேலும் முக்கியமான வைத்திய சேவையைக் கொண்ட ஆஸ்பத்திரிகளை இயங்காமல் முடக்குவது போன்ற சம்பவங்களை நோக்குகையில் அநுர அரசாங்கத்தின் மீது பொறாமை கொண்ட ஒரு குழு மறைமுகமாக இயங்குவதாகவே சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.
தாங்கள் முன்னைய ஊழல்கள் மீது மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்துடன் இருக்கும் குழுவாகவும் இருக்கலாம். எனவே அநுர அரசாங்கம் விழிப்படைய வேண்டும். இவ்வாறு ஒரு குழு இயங்குகிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஏனென்றால் ஒரு காமவெறியனுக்கு எங்கேயாவது ஒரு பெண் போதும். அதைவிடுத்து ஆஸ்பத்திரியில் கடமை நிமித்தத்தில் ஒரு பெண் வைத்தியர் தேவையா?
இவ்வாறு பெண் வைத்தியர் மீது பாலியல் கொடுமை நடத்தி நாட்டிலுள்ள ஆஸ்பத்திரிகளை இயங்காமல் முடக்கி, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தி அநுர அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் செயல் என்றே சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.
அநுர சாங்கத்தின் மீது பொறாமை கொண்டவர்களும் தங்களின் முன்னைய ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாட்டிக் கொள்வோமோ என்று சிந்திக்கும் ஊழல்வாதிகளின் கூட்டுச் சதிபோல் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே அநுர அரசாங்கம் இவ்வாறான சதிக்குழு இயங்குகிறதா? என கண்டுபிடித்து தக்க நடவடிக்கையெடுத்து நாட்டை அமைதிக்கு கொண்டு வர வேண்டும்.
கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்

