News
ஜனாதிபதித் தேர்தலில் தயாசிரி ஜயசேக்கர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க போவதாக அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தயாசிரி ஜயசேக்கர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.