News

தேஷபந்து தென்னகோன் சார்பில் வாதாட ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்றை வந்தடைந்தனர்.

மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பான  வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, அதுவரை அவர் நீதிமன்ற அறையிலேயே இருப்பார்.

அவர் சார்பில் வாதாட ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்றுக்கு வந்துள்ளனர்.

அதேவேளை மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு பல சிறைச்சாலை பேருந்துகளும் வந்துள்ளன.

அந்த சிறைச்சாலைகளின் சந்தேக நபர்களும் கைதிகளும் நீதிமன்ற வழக்குகளில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button