News
லொறியுடன் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

நெலுவ – பெலவத்த வீதியில் தேயிலை கொழுந்தை ஏற்றிச் சென்ற லொறியுடன் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் நெலுவ களுபோவிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நெலுவவிலிருந்து பெலவத்தை நோக்கிச் சென்ற லொறி, பெலவத்தையிலிருந்து நெலுவ நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தினியாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

