“NPP யில் சூழ்நிலைக் கைதியாக பலர் மாறியிருப்பது கவலையளிக்கிறது.”

NPP க்கு வாக்களித்தவர்களின் மனோநிலை இவ்வாறுதான் இருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி எவ்வாறானதாக இருக்கும் என்பதை 100% எதிர்வுகூறல் செய்து அருள்வாக்கு தரும் அளவுக்கு நம்மில் எவரும் தீர்க்கதரிசிகளோ, முக்காலமும் உணர்ந்த மகான்களோ அல்ல.
ஆனால், NPP மூலமாக ஒரு change கிட்டுமோ, இல்லையோ அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பே வாக்களித்தவர்களுக்கு இருந்தது.
NPP ஆட்சியமைத்து மிகக் குறுகிய காலத்திலேயே எதிர்விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை வரலாற்றில் ஆட்சியமைத்து இவ்வளவு குறுகிய காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் எதிர்விமர்சனங்களை பெற்றிருந்ததாக வரலாறு இல்லை. கோட்டாபாய கூட இரண்டரை ஆண்டுகளின் பின்னரே எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதை குறிப்பிட்டுக் காட்டவும் முடியும்”
இவ்வாறு எதிர் விமர்சனங்களை NPP பெறுவதற்குக் காரணம் அவர்களால் வழங்கப்பட்ட தேர்தல் காலத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகளே தவிர வேறொன்றில்லை. ஆகவே மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் வகையில் NPP அரசாங்கம் எவ்வாறான செயற்பாடுகளை இன்னும் மேற்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு குறைந்து செல்லுவதாகவே விளங்குகிறது.
PTA – பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான NPPயின் நிலைப்பாடு முன்னுக்குப்பின் முரணாகவே இருந்துவருகறது.
NPP யின் PTA தொடர்பான கருத்தானது, அவர்கள் தேர்தலுக்கு முன்பிருந்த “இச்சட்டம் நீக்கப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டையோ அல்லது NPP தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றோ அமைந்திருக்கவில்லை.
அனைவருக்கும் தெரியும் அவர்கள் எதிர் கட்சியில் இருந்தபோது PTAயிற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பினர். இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மற்றும் ஊடகங்களிலும் கோஷமிட்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
ஒரே விடயத்தில் இரண்டு நிலைப்பாடுகளை தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் என்று வெவ்வேறு நிலைகளில் எடுத்திருப்பது NPP யின் உண்மைத் தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
எதிர் கட்சியில் இருக்கும் போது தமது கட்சி நலனை அல்லது தேர்தல் இலக்குகளை கருதி ஒரு விடயத்தை எதிர்த்து மக்களை வழி நடத்துவதும் பின் ஆட்சிக்கு வந்தபின் அதே விடயத்தை நாட்டு நலன் எனக் கூறி கடந்த கால அரசாங்கங்களைப் போன்று ஆதரிப்பதும் பலமான எதிர்கட்சியின் தேவையை உணர்த்துகிறது.
NPPயின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் 231 ம் பக்கத்தில் பயங்கரவாத சட்டங்களை இல்லாதொழித்தல் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தும் தற்போது நீக்குவதா? இல்லையா? என்று பரிசீலிப்பதும் இவர்களின் நிலைப்பாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற அதேவேளை 2/3 பெரும்பாண்மையை கொண்டிருக்கின்ற NPP யின் ஆட்சியில் PTA வுக்கு ஊடாக கைதுகள் நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பதானது பலரை சூழ்நிலைக் கைதிகளாகவும் மாற்றியுள்ளது அல்லது மாறியும்முள்ளனர்.
MLM.சுஹைல்



