News

பசியாலும் வேதனையாலும் வாடும் மக்களின் வலியையும் கண்ணீரையும் புரிந்துகொண்டு அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டியது எமது பொறுப்பாகும் ; சஜித்

இந்த நாட்டுக்கு மக்களினது பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளும் தலைவர் ஒருவர் தேவை. துன்பப்படும் மக்களை விடுவிக்கும் பொறுப்பை எந்தவித பின்வாங்கலும் இன்றி நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

சமாதான நீதவான், கொரிகஸ்வெவ சந்திரரதன நாயக்க தேரருக்கு மல்வத்து பீடத்தின் மகாசங்கத்தினரின் ஆசியுடன் இரண்டாம் சங்கநாயக பதவிப் பத்திரம் மற்றும் கௌரவப் பட்டம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (31) அன்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில்  அவர் மேலும் கூறுகையில், 

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் காணப்படும் IMF இணக்கப்பாட்டை மக்களுக்குச் சாதகமான ஒன்றாக மாற்ற வேண்டும். மக்களை வாழ வைப்பது எமது கடமையாகும். இதனை நிறைவேற்ற நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

இந்த நாட்டுக்கு மக்களினது பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளும் தலைவர் ஒருவர் தேவை.

துன்பப்படும் மக்களை விடுவிக்கும் பொறுப்பை எந்தவித பின்வாங்கலும் இன்றி நிறைவேற்ற வேண்டும். 

வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் பயணத்தில் பெரும் செல்வந்தர்கள் அதிக சுமைகளைச் சுமக்க வேண்டும்.

துன்புறும் மக்களுக்கான எமது பொறுப்பை சரியாக நிறைவேற்றி அனைவரும் வாழக்கூடிய தாய்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். 

எமது நாட்டின் வங்குரோத்து நிலையால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இம்மக்களுக்கு ஆற்றவேண்டிய பெரும் பணி எம் மத்தியில் இருந்து வருகிறது.

பசியாலும் வேதனையாலும் வாடும் மக்களின் வலியையும் கண்ணீரையும் புரிந்துகொண்டு அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டியது எமது பொறுப்பாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button