எமது தவிசாளர் ஒருவரை பெறுவதன் மூலமே தர்கா நகரை அபிவிருத்தி செய்ய முடியும்..

எமது தவிசாளர் ஒருவரை பெறுவதன் மூலமே தர்கா நகரை அபிவிருத்தி செய்ய முடியும்.ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே பேருவளை பிரதேச சபைக்கு எமது தவிசாளர் ஒருவரை தரமுடியும்.
பேருவளை பிரதேச சபை வேட்பாளர் ஹுனைப் எம் ஹனீப்
மே 6 ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பேருவளை பிரதேச சபையின் ஆட்சியை எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு கைப்பற்ற அதிக வாய்ப்புக் உள்ளது.
திசைகாட்டி அரசு ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்துள்ள காரணத்தால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் திசைகாட்டிக்கு வாக்களித்த தர்கா நகர் மக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளார்கள்.
அத்துடன் பலஸ்தீன் மீது இஸ்ரேல் செய்யும் அநியாயங்களை தாங்க முடியாமல் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டிய காரணத்திற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மொஹமட் ருஷ்தி அநியாயமான முறையில் கைது செய்யப்பட்ட காரணத்தினால் பலஸ்தீன் மீதும் முஸ்லிம்கள் மீதும் நேசம் கொண்ட முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இல்லை என்ற முடிவில் உள்ளார்கள்.
அத்தோடு தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் கடும் போக்கு கொண்ட முஸ்லிம் ஆதரவாளர்கள் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்துள்ள ருஷ்தியை ஒரு தீவிரவாதி போல சித்தரித்து முஸ்லிம்களுடன் விவாதிப்பது மிகவும் கவலையான விடயம் ஆகும். எனவே இவர்களுக்கு முஸ்லிம்கள் சரியான பதிலை இந்த தேர்தலில் வழங்குவார்கள்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் 41 உறுப்பினர்களை கொண்ட பேருவளை பிரதேச சபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு 15 (போனஸ் அடங்களாக) ஆசனங்களை மாத்திரம் பெற்றால் போதுமானது. அத்துடன் திசைகாட்டி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மொத்தமாக 8 வரையான உறுப்பினர்களை பெற வாய்ப்பு உள்ளது. அவர்கள் சபை அமைக்கும் போது தமது ஆதரவை ஐக்கிய மக்கள் சக்திக்கே வழங்குவார்கள்.
எனவே இவ்வாறான நிலை உருவாகி தர்கா நகரில் உள்ள மூன்று தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் அநுபவமும் ஆற்றலும் மிக்க சிரேஷ்ட உறுப்பினரான பைஸான் நைஸர் அவர்களே பேருவளை பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை தொகுதி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் அவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொருளாளர் ரூமி ஹாஷிம் அவர்களும் உறுதியளித்துள்ளார்கள்.
முஸ்லிம் ஒருவரை தவிசாளராக தெரிவு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே முடியும் என்பதுடன் எமது ஒருவர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே எமது ஊருக்கு சேவை நடக்கும் என்பதை எல்லோரும் அறிவீர்கள்.
எனவே தர்கா நகர் மக்கள் பேருவளை பிரதேச சபைக்கு செலுத்தும் வரிப்பணத்தை தர்கா நகரின் அபிவிருத்திக்கு செலவு செய்யும் ஓர் வாய்ப்பையும் உருவாக்கி அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்ட ஏனைய முஸ்லிம் பகுதிகளையும் அபிவிருத்தி செய்து கொள்வதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்வோம். ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்திற்கு வாக்களிப்போம். பேருவளை பிரதேச சபை தவிசாளராக பைஸான் நைஸர் அவர்களை தெரிவு செய்வோம்.
ஹுனைப் எம் ஹனீப்
பேருவளை பிரதேச சபை வேட்பாளர்



