News

NPP அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்துள்ள நிலையில், 2019 இல் ஸஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர்களால்  இரு பொலிஸார்  கொலை செய்யப்பட்ட  சம்பத்தில் பிழையான தகவலை வழங்கிய புலனாய்வுத்துறை பொலிஸ் அதிகாரி கைது


வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை கொலை செய்த சம்பவத்தை சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு. கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சி.ஜ.டியினர் கொழும்பில் வைத்து நேற்று இரவு (08) கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலிகளிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த அஜந்தன் இந்த படுகொலையை செய்ததாக அறிக்கையிட்டதையடுத்து அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.



இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியை கொழும்பிலுள்ள சி.ஜ.டி நான்காம் மாடியில் தடுத்துவைத்த நிலையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் ஸஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸஹரானின் சாரதியான முகமது சரிப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்தது. அதன்பின்னர் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்.



இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றம் சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.



இதனுடன் தொடர்புடைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவரையும் சி.ஜ.டியினர் வரவழைத்து அவர்களிடம் விசாரணையை முன்னெடுத்த நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை நேற்று கொழும்புக்கு வரவழைத்த சி.ஜ.டியினர் கைதுசெய்தனர்.



கனகராசா சரவணன்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button