News
ஒன்லைனில் பொருட்களை ஓடர் செய்து, பணம் செலுத்த மறுத்த இருவரை பொலிஸார் கைது செய்தனர் #இலங்கை
இணையத்தில் பொருட்களை ஓடர் செய்து விற்பனையாளருக்கு பணம் செலுத்த மறுத்த இருவரை வெலிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து நான்கு கைத்தொலைபேசிகள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு ரவுட்டர் என்பனவும், இணைய விற்பனையாளர் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரண்டு கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இணைய விற்பனையாளரின் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களில் வசிக்கும் 20 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்