மக்களின் நலனை இலக்காகக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம் என சஜித் பிரேமதாச தெளிவு படுத்தினார்.
மக்களின் நலனை இலக்காகக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுடன் ஐக்கிய மக்கள் சக்தி இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.
இந்த நிகழ்வில் கருத்துரைத்த போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் நோக்கத்திற்காக சந்தர்ப்பவாத உடன்படிக்கையாக இன்றைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
கொள்கையளவிலான 25 விடயங்கள் அடங்கலாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.