எம்மை விட்டும் பிரிந்த ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் மடவளை பஸார் அல்ஹாஜ் ஏ.எஸ்.ஏ.அஸீஸ்

(ஜே.எம்.ஹாபீஸ்) ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எஸ்.ஏ.அஸீஸ் காலமானார். இவர் ஓய்வு பெற்ற கல்வி நிர்வாக சேவை இரண்டாம் தர அதிகாரியாவார்.
மடவளையைச் சேர்ந்த இவர் மாத்தளை சாஹிரா கல்லூரி, திஹாரிய அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், உற்பட பல பாடசாலைகளில் அதிபராகவும் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் தர்ஹா நகர் ஆசிரியர் பயிற்சிக்கல்லாரியில் விரிவுரையாளராவும் சிறிது காலம் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் கம்பஹ மற்றும் நீர்கொழும்பு போன்ற கல்வி வலயங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளராவும், பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
இவர் தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் தொலைக்கல்வி பயிற்சி நெறி, கல்வி டிப்லோமா பயிற்சி நெறி, மற்றும் கல்வியியல் பட்டமாணி (பீ.இ.டி. பயிற்சி நெறி) போன்ற வற்றில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். அண்மை காலத்தில் ஆசிரியர்களுக்கான மேலதிக மொழி விருத்திப் பாடசெறியில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இது தவிர இன்னும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் மொழி தொடர்பான பகுதி நேர விரிவுரையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்துள்ளார்.
மும்மொழியையும் சரலமாக கையாலக் கூடிய இவரது இழப்பு தமிழ் மொழி பேசும் சமூகங்களுக்கு பாரிய இழப்பாகும் எனப் பலர் கவலை தெரிவித்தனர். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர் கண்டி தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமானார்.
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் மடவளை ஜமியுல் கைராத் ஜூம்மா பள்ளி மையவாடியில் 22ம் திகதி இரவு இடம் பெற்றது.

