News
தேர்தல் துண்டுப்பிரசுரங்களை இரவில் வீடு வீடாக பகிர்ந்த குற்றத்தில் புத்தளம் – தில்லையடி பிரதேச பெண் வேட்பாளர் பொலிஸாரால் கைது

தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறி ஆதரவாளர்களின் உதவியுடன் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை வீடு வீடாக பகிர்வதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பெண் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் – தில்லையடி பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 86 தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

