News
தேசிய மக்கள் சக்திக்கு இன்னும் முழுமையான அதிகாரம் கிடைக்கவில்லை..

தேசிய மக்கள் சக்திக்கு இன்னும் அதிகாரம் முழுமையாக கிடைக்கவில்லை என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் அதிகாரம் வழங்கப்படுமாயின்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகளின் அதிகாரத்தை பாராளுமன்றமும் பெற வேண்டும் எனவும் தற்போது பாராளுமன்றம் மற்றும் நாட்டு தலைவரின் அதிகாரம் மட்டுமே தமது கட்சியிடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
எனவே இம்முறை உள்ளூராட்சி சபையின் அதிகாரமும் தமது கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.



