News

புதிய ஜனநாயக மார்க்ஷிச லெனினிஷ  கட்சியின் மே தின நிகழ்வு

புதிய ஜனநாயக மார்க்ஷிச லெனினிஷ  கட்சியின் (NDMLP) மே தினம் நேற்று மாலை யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது.

அத்துடன் மேதின ஊர்வலம் மானிப்பாய் வீதி ஐந்து சந்தியில் இருந்து புண்ணாளை வீதி, stenly வீதி வழியாக மணிகூட்டு கோபுரம்   ஊடாக சென்று நகர் முழுதும் வலம் வந்தது.

யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் கண்டி – பாத்ததும்பர தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் பஸ்மிர் புஹாரி உரை நிகழ்த்தினார்.  பாலஸ்தீன மக்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அங்கிகளையும் சால்வையையும் அணிந்திருந்த அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் இஸ்ரேல் சியோனிச படுகொலைகளை கண்டித்தும், பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் உரை நிகழ்த்தினார். ( Madawala News)

மேலும் இலங்கை முஸ்லிம்கள் அரசியலில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அதே வேளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் இருந்து தவறி உள்ளது, முஸ்லிம் இளைஞர்களையும்  கைது செய்கிறார்கள், இப்போதைய அரசியல் கட்சிகளில் முற்போக்கான அரசியல் கட்சியாக உள்ள எமது புதிய ஜனநாயக மார்க்ஷிச லெனினிஷ கட்சி மக்களுக்காக என்றுமே போராடும் நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அரகல போராளிகளின் கட்சி எனவும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button