News
அரசியல் கலாசாரத்திற்கு அரசாங்கம் வழங்கியுள்ள தரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும்..

அரசியல் கலாசாரத்திற்கு அரசாங்கம் வழங்கியுள்ள தரம் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கலாசாரத்தை எமது எதிரிகளால் இன்னும் எதிர்கொள்ள முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அங்குரங்கொஅ பிரதேசத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



