டான் பிரியசாத் கொலை : துப்பாக்கிச்சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது !!

22.04.2025 அன்று இரவு வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலமுல்ல பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் டான் பிரியசாத் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஓடிவிட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த டான் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 22.04.2025 அன்று உயிரிழந்தார்.
இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தினர் ஆரம்பித்து 24.04.2025 அன்று சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதன்படி, விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், துப்பாக்கிச்சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் 02.05.2025 அன்று கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் 52 வயதுடைய வெபட வடக்கு, வெபட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
இந்த சந்தேக நபரும் உயிரிழந்தவரின் சகோதரரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் என்பதுடன் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



