News
அக்கா NPP யிலும் தம்பி SLPP யிலும் போட்டி !

“நம்மை விட்டுப் பிரிந்த பலர் மீண்டும் திரும்பி வந்துள்ளனர்” – ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபை வேட்பாளர் கிறிஸ் பால்தசார் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கட்சியை மறுசீரமைப்பது குறித்தும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தெஹிவளை-கல்கிஸ்ஸ தொகுதிக்கான திட்டங்கள் குறித்தும் அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கிரிஸ் பல்தசார் கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி மேயர் வேட்பாளர் ராய் பல்கசரின் சகோதரர் ஆவார்.
ராய் கிரிஸ் ஆகியோர் வெவ்வேறு கட்சிகளில் வாக்கு கேட்பது விசேட அம்சமாகும்.



