News

அமெரிக்காவிடம் நீண்டதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் 1000 உள்ளிட்ட 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான  ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது சவூதி

சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா தொடக்க கால அனுமதி வழங்கியுள்ளது.





அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியா செல்ல இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.





நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பு இடைநிலை தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் AIM-120C-8  ஏவுகணைகள் 1000 மற்றும் மற்ற தொழில்நுட்ப   ஆயுதங்களை விற்பனை செய்ய இருக்கிறது.





அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். அமெரிக்க  ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டொலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா போர் விமானத்தில் பயன்படுத்த இருக்கிறது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button