News

பிரதேசத்தில் உள்ள முச்சக்கரவண்டிகளை திருடி காதலியுடன் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞனொருவரை வலைவீசிப் பிடித்த பொலிஸார்

முச்சக்கரவண்டிகளை திருடி காதலியுடன் சுற்றித்திரிந்த இளைஞனொருவரை 220 மில்லிகிராம் ஹெரோயின் பொதிகளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது திருடப்பட்ட மூன்று முச்சக்கரவண்டிகளையும் கண்டெடுத்துள்ளதாகத் அவர் தெரிவித்தனர்.

வெலிமடை, ரத்தம் ஊவா பரணகம போன்ற பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை அவ்வப்போது திருடி காதலியுடன் சுற்றித்திரிவது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வெலிமடை தோட்டப்பகுதியில் நேற்றுமுன்தினம் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இதன்போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button