News

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு (சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லவில்லை)

ஏழு வருட இடைவெளிக்குப் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகியது.

வாக்குச் சாவடிகளைச் சுற்றி தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்குமாறு அங்கு ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் அனைத்து பொதுமக்களையும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் வாக்களிக்க, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, தங்கள் தங்குமிடங்களிலேயே தங்கியிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது.

ஆகக் கூடுதலாக 394,533 பேர், கொழும்பு மாநகர சபைக்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஹப்புத்தளை நகர சபைக்கு 3051 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் இது ஆகக் குறைந்த வாக்காளர்களின் எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • வாக்குச்சீட்டில் எழுதவோ, கீறவோ, கிறுக்கவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும்.
  • வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும்.
  • மதுபானம் அருந்துவிட்டு அல்லது போதைப்பொருட்கள் பாவனை செய்துவிட்டு வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் வருவதற்கு தடை.
  • 339 உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கு 8287 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்
  • வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு நேரகாலத்துடன் வந்து வாக்களிக்குமாறும், அடையாள அட்டையை எடுத்துச் செல்லுமாறும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button