News
அம்பாறை பிரதேச பொலிஸ் நிலையம் ஒன்றில் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்

அம்பாறை பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று (06) அதிகாலை 5:15 மணியளவில், பதியதலாவ பொலிஸ் நிலையத்தின் காவலர் குடியிருப்பில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
இவ்வாறு உயிரிழந்தவர், 59 வயதுடைய, பிபிலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது



