News
8 இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானம் !
தமது கட்சி சார்பில் நாமல் ராஜபக்ஷவை தேர்தலில் நிறுத்த பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை அடுத்து இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்த்ர ராஜபக்ஷ , தேனுக விதானகே , இந்திக அனுருத்த , டி வி சானக , பிரன்ன ரனவீர , சிரிபால கம்லத்,மொஹான் டி சில்வா, ஆகிய 8 இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டது .