News
நான் உட்பட அரசாங்கத்தில் உள்ள 15 பேரே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம் ; சதுரங்க ..

எல்லாவற்றிற்கும் பதிலளிக்கக்கூடியவர்கள் அரசாங்கத்தில் மிகக் குறைவானவர்கள் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
159 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தாம் உட்பட 15 பேர் மட்டுமே விமர்சிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் உட்பட பதினைந்து பேர் அடிக்கடி ஊடகங்களை எதிர்கொள்வதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
இன்று ஜனாதிபதி அனுர திஸாநாயக்க கேலி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சமூக வலைத்தளங்களில் தானும் திருமதி லக்மாலி ஹேமச்சந்திரவும் மாத்திரமே தீவிரமாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் தான் சமூக வலைதளங்களால் கடுமையாகத் தாக்கப்படுவதாக இணைய சேனலில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட அவர் கூறினார்.



