News

“Dr. ஷாபி அவர்களைப் போன்று அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட பலரும் நினைவுகூறப்பட வேண்டியவர்கள்”

அண்மையில் Dr ஷாபி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மையப்படுத்தி “மருத்துவர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்” தொடர்பான புத்தக வெளியீடொன்று வெளியிடப்பட்டிருந்தது.

உண்மையில் கடந்த அரசாங்கங்கத்தின் காலத்தில் Dr.ஷாபி அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த அநீதியை யாரும் மறுக்கவும், மறக்கவும் முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இவ்வாறான நூல் வெளியீட்டுக்கு காரணமானவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவுத்துக்கொள்கின்றோம், என்றாலும் இவ்வாறான அநீதிகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட Dr. ஷாபி அவர்களைப் போன்று சமூகத்திற்காக சிறை சென்ற பலரையும் சமூகமாக நினைவுபடுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது.

அதேநேரம் ஏக காலத்தில் சமூகம் படுமோசமாக பாதிக்கப்பட்டிருந்த “ஜனாஸா எரிப்பு” விவகாரங்கள் கூட போதியளவான எதிர்பார்த்தளவிற்கு பேசப்பட்டிருக்கவில்லை என்பது பூர்த்தி செய்யப்படாமலே இருக்கின்றது.

அதேபோன்று Dr ஷாபி க்கு நடந்த அநீதிகள் தொடர்பாக பல விடயங்கள் தாராளமாக சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு பின்னர் அவருக்கான நீதி சட்ட ரீதியாக கிடைக்கப்பெற்று அதனுடன் இணைந்ததாக அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய 2.6 மில்லியன் சம்பள நிலுவையும் அவருக்கு கிடைப்பெற்றதையும் நாம் அறிவோம்.அதேநேரம் Dr. ஷாபி அவர்களின் அநீதிக்காக சமூகம் என்ற ரீதியில் பலரின் பிரார்த்தனைகளும், பங்குபற்றலும் இருந்திருக்கின்ற என்பதை நாம் மறுக்கவும் முடியாது.

உண்மையில் பலர் தனிநபர்களாகவும், குழுக்களாகவும் கடந்த SLPP மொட்டுக் கட்சியின் அரசாங்கக் காலத்தில் தேர்தல் அரசியலை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த இனவாதச் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டு அநீதிக்கு உள்ளாகியிருந்தனர் என்ற ரீதியில் மக்கள் தற்போது இனவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்த கட்சிகளையெல்லாம் புறக்கனித்து NPP யை பெரும்பாண்மையாக தெரிவு செய்தும் உள்ளனர்.

“இனக் களவரங்களின் போது தங்களது உயிர்களை இழந்த தியாயிகளும், பாதிக்கப்பட்ட பல குடும்பத்தவர்களும், திட்டமிட்டு அநியாயமாக கைது செய்யப்பட்டவர்களும் என்ற நீண்ட பட்டியல்கள் எம்முன் இருக்கின்றன என்றாலும்,”

“இதற்கு முன்பிருந்த வெளிப்படையான இனவாத செயற்பாடுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், கைதுகளைப் போன்று தற்போதுள்ள NPP அரசாங்க காலத்தில் அதற்கான சாத்தியப்பாடுகள் இருக்காது என நம்புகின்றோம்.

“இனவாதத்தை இல்லாமலாக்குவதற்காகவே இவ் அரசாங்கம் ஆட்சிபீடமேறியது அதேபோல் மக்களும் இதற்காகவே ஆணை வழங்கியுள்ளார்கள்.”

தற்போதுள்ள NPP அரசாங்கத்தில் முஸ்லீம்களுக்கு அவர்களின் சில ஆட்சியியல் செயற்பாடுகளில் அதிர்ப்தியிருந்தாலும்,கடந்த கால அரசாங்கங்களில் வெளிப்படையாக நடைபெற்ற இனவாத செயற்பாடுகள், இனக் களவரங்கள், அநியாயங்கள், சொத்தழிப்புக்கள் இதுவரையில் ஏற்பட்டிருக்கவில்லை அவ்வாறு ஏற்படுவதற்கு இவ் NPP அரசாங்கம் இடம் கொடுக்காது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

காரணம் ஒரே நாட்டவர்களாக நாம் இங்குள்ள இனவாதங்களை,பிரிவினைகளை இல்லாமல் ஆக்குவோம் என்ற தொணியிலே மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்திருக்கிறார்கள்.இதற்கு மக்களும் தாராளமாக அதிலும் குறிப்பாக எமது நாட்டிலுள்ள பெரும்பாண்மை, சிறுபாண்மை இனத்தவர்கள் என்று பெரும்பாலானவர்கள் அதற்கான ஆணையையும் அரசாங்கத்திற்கு வழங்கியும் உள்ளார்கள்.

இதனால் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை அல்லது கடந்த அரசாங்கங்களின் போது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக் களவரங்கள், கைதுகள்,உயிரிழப்புகள் போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகக் கூட மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி உயிர்பிப்பதைவிட இனிமேல் இவ்வாறான இனரீதியான அநியாயமன செயற்பாடுகள் எமது நாட்டில் அரங்கேற்றம் செய்யாமலாக்கப்படுவதற்கான சுமுகமான சூழ்நிலைகளுக்காக எம்மாளான பங்களிப்புக்களை வழங்குவோம் என்பது எமது அன்பான சுட்டிக்காட்டலாகும்.

கடந்தகால அரசாங்கங்களின் ஆட்சியின் போது இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த இனக் களவரங்களின் போது தங்களது உயிர்களை இழந்த தியாயிகளும், பாதிக்கப்பட்ட பல குடும்பத்தவர்களும்,திட்டமிட்டு அநியாயமாக கைது செய்யப்பட்டவர்களும் என்ற நீண்ட பட்டியல்கள் எம்முன் இருக்கின்றன உதாரணத்திற்காக சிலவற்றை எம்மால் குறிப்பிட்டுக் காட்ட முடியும்.

அந்தவகையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் தொடர்புபட்ட சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியுடன் தொடர்புகளை பேணியதாக கூறி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சமூகத்திற்கான விடயங்களில் செயலுக்கத்துடன் செயற்பட்டவர்.

தற்­கொலை தாக்­கு­தல்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை, அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளுக்கு இலங்­கைக்குள் மீள பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்க,அதனைக் கட்­டி­யெ­ழுப்ப உத­வி­யமை மற்றும் இனங்­க­ளுக்கு இடையே முரண்­பா­டு­களை தோற்­று­விக்க நட­வ­டிக்கை எடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்தப்பட்டு ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்யப்பட்டு சிறைக்குப் பின்னர் வடுதலையாகியும் இருந்தார்.ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை பொறுத்தவரையில் தஃவா என்ற அடிப்படையில் சமூக செயற்பாட்டில் பாரிய பங்குவகித்தவர்.

இளம் கவிஞர்,ஆசி­ரி­ய­ரான அஹ்னாப் ஜஸீம் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர்,அத­னுடன் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்­யப்பட்டார்.பின்னர் தன்­னிடம் கற்ற மாண­வர்­க­ளி­டையே அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி,பிற மதத்­த­வர்கள் மீது பகைமை உணர்வை தூண்­டி­ய­தாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைவாசத்தின் பின்னர் விடுதலையாகினார்.

பெண்கள் சம்­பந்­த­மாக சத்­தி­ர­சி­கிச்சை தொடர்பில் பத்­தி­ரி­கை­யொன்றில் வெளி­யான செய்­தியை வைத்து சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்டு Dr.ஷாபி அவர்களும் கைதாகி விடுதலை பெற்றிருந்தார்.அவர் ஒரு வைத்தியராக சமூகத்திற்கு பல சேவைகளை வழங்கியவர்.

அதேபோன்று ருஷ்டி என்ற ஒரு சகோதரரும் இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிகர் ஒட்டியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்திற்கூடாக கைதுசெய்யப்பட்டு தற்போது பிணையில் விடுதலையாகியும் உள்ளார்.

இவைகள் மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களின் ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட இனக் களவரங்களினால் பொருளாதார ரீதியாக நஷ்டமடைந்த பலரும் இப்போதும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

இவ்வாறு வெவ்வேறு காரணங்களுக்காக ஒவ்வொருவரும் அநியாயமாக பாதிக்கப்பட்டு அநீதிக்கு உள்ளானவர்கள் என்பதையும் பலரின் உயிர்கள் பறிக்கப்பட்டதையும் எம்மால் ஒருபோதும் மறந்துவிட முடியாது.

இனவாத செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகத்தில் மிக மோசாமாக பாதிக்கப்பட்ட பலரையும், அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அநீதிகளையும் நினைவு கூறுவது பாதிக்கப்பட்டகளுக்கு செய்யும் மிகப்பெரிய ஆருதலாகும் என்றாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இது பொருத்தமாக அமையுமா? என்ற வினா எம்மத்தியில் எழுகின்றது.

இச் சூழ்நிலையில் தற்போது சட்டரீதியாக நீதி கிடைக்கப்பெற்ற இனவாத செயற்பாடுகளை திரும்பத்திரும்ப பேசிக் கொண்டிருப்பது அப்போது இனவாத கட்சியாக அடையாளப்படுத்தப்பட்ட SLPP ஐ புறக்கணித்து NPP க்கு வாக்களித்து அரசாங்கத்தை தெரிவுசெய்திருந்த SLPP ஆதரவாளர்களுக்கு இவ்வறான பழைய விடயங்கள் இப்போது குத்திக் கட்டுவது போன்றும்,உணர்வு ரீதியாக தூண்டுவதும் என்பது போலாகிவிடாதா?

சமூகத்திற்காக போராடி சிறை சென்ற பலரையும் சமூகம் நினைவு கூறவேண்டிய தேவை இருந்தாலும், இனவாதத்தை புறக்கணித்துள்ள இவ் அரசாங்க காலத்தில் பழைய விடயங்களை மீண்டும் மீண்டும் பேசுவது இனவாதத்தை உணர்வு ரீதியாக தூண்டிவிடாதா?

MLM.சுஹைல்

Recent Articles

Back to top button