News

நாங்கள் வென்ற சபைகளை அமைக்கும் போது எங்களை தொந்தரவு செய்தால்… நாங்களும் தொந்தரவு செய்வோம்

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்றங்களில் சபைகளை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால் அக்கட்சியும் அதனைத் தடுக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே மக்களின் கருத்துக்கு அமைய அந்த சபைகளின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் யார் என்ன சொன்னாலும் தேசிய மக்கள் சக்தி இத்தேர்தலில் அதிகூடிய வெற்றியைப் பெற்றதாகவும் அதற்கமைவாக 267 சபைகள் வெற்றிபெற்று 120 சபைகளை பிரச்சினையின்றி ஸ்தாபிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம் 32 சபைகளில் உறுப்பினர்கள் அரசாங்க, எதிர்க்கட்சியினால் சமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அவ்விடங்களில் தடையின்றி சபைகளை நிறுவ முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 14 சபைகள் இருந்தாலும் 13 சபைகளில் மாத்திரம் சபைகளை நிறுவ முடியாது எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் குறைந்தது ஓரிரு சபைகளை நிறுவ முடியாத இடங்களில் கூட அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கு தேவையான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், அதன்படி கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் உள்ள பெரும்பான்மையான சபைகளை அரசாங்கமே நிறுவ முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button