அக்குறணை அல் ஆலிம் அல் ஹாபிழ் ஸுமைர் மௌலவி இலங்கை உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் .

அல்ஹம்துலில்லாஹ் அக்குறணை அஸ்ஹரிய்யா மஹல்லவைச் சேர்ந்த அல் ஆலிம் அல் ஹாபிழ் ஸுமைர் மௌலவி அவர்கள் இலங்கை உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் கடந்த மே மாதம் 8ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்
மௌலவி ஏ.எல்.எம். நயீம் பஹ்ஜி மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியை முனவ்வராவின் மகனான இவர் ஆரம்பக் கல்வியை அக்குறணை அஸ்ஹர் கல்லூரியிலும் பின்னர் அல்குர்ஆன் மனனம் மற்றும் இஸ்லாமிய கற்கை நெறிகளை அக்குறணை மீஸானிய்யா அரபுக் கல்லூரியிலும் கற்றார்
தனது 14 வயதில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து 21 வது வயதில் அதே கல்லூரியில் ஷரியா கற்கை நெறியையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தார்.
தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவில் எல்.எல்.பி பாடநெறியை ஐக்கிய இராஜ்யத்தின் பக்கிங்ஹம்ஷெயார் நியூ யுனிவர்சிட்டியுடன் இணைந்த ஐ டி எம் கெம்பஸ் பயின்றார்.
அதன் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டக்கல்லூரின் இறுதிப் பரீட்சையில் தோற்றி 2024 ஆம் ஆண்டு வெற்றிகரமாக சித்தி அடைந்தார்.
சட்டத்துறையில் உயர்கல்வியை கற்றுக் கொண்டிருக்கும் போதே கொழும்பு சாஹிரா கல்லூரி மற்றும் இன்னும் பல தனியார் கல்லூரிகளில் ஆசிரியராக கடமை ஆற்றினார்.
மார்க்கக் கல்வியை சுமந்து உலகியல் கல்வியும் இணைந்த ஸுமைரின் புதிய பயணம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என நம்புகிறோம்.



