News
வரலாற்றில் மிகப்பெரிய முதலீட்டை நாமே கொண்டு வந்தோம்.. ஒரு டாலர் கூட கடன் வாங்கவில்லை..- லக்மாலி

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடாக 3.7 பில்லியன் டொலர் சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களுடன் சினோபெக் எந்த உடன்பாடும் எட்டவில்லை எனவும் எனவே தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வரவில்லை என கூறுவது பொய்யானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடன் வாங்கி நாட்டை ஆளும் ஆட்சியாளர் தேவையா என்றும் லக்மாலி ஹேமச்சந்திர கேட்டதுடன், இதுவரை கடன் வாங்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.
சிரச அலைவரிசையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



