இப்படியே செல்ல முடியாது.. ஆட்சியைப் கைப்பற்ற வேண்டுமாயின் சமகி ஜன பலவேகய கட்சிக்கு மறுசீரமைப்பும் புதிய தலைமையும் தேவை

**SJBக்கு புதிய தலைமை தேவை: இப்படியே செல்ல முடியாது – சமிந்த விஜயசிறி MP
சமகி ஜன பலவேகயவுக்கு (SJB) புதிய தலைமை தேவை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஒற்றுமையைப் பேணிக்கொண்டு, சமகி ஜன பலவேகய மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு ஏற்ப கட்சியின் செயற்பாடுகள் மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஆட்சியைப் கைப்பற்ற கட்சியின் செயற்பாடுகளில் மாற்றம் அவசியம் எனவும், இது கட்சிக்குள் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இலங்கையை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கு, திறன், அறிவு மற்றும் தொலைநோக்கு உள்ள புதிய தலைமைக்கு கட்சியின் திட்டங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



