News

சவூதி அரசின் இலவச ஹஜ் வீசா ஏழைகளுக்கானதா? 

சவூதி அரசின் இலவச ஹஜ் வீசா ஏழைகளுக்கானதா? Updated

வழமையாக வழங்கப்படும் இலவச Bessa Visaவுக்கு மேலதிகமாக இம்முறை மன்னர் Salman அவர்களால் 1300 இலவச வீசாவுடனான முழு Sponsorship வழங்கும் Hajj “Annual Guests” 100 நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இவ்விரு Visaக்களால் உண்டான குழப்ப நிலையை இப்பதிவு தெளிவுபடுத்துகின்றது.

✅ 01. Free Movement Pass (FMP) அல்லது Bessa Visa என்பது சவூதி அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படுகின்ற Previllaged visaவாகும்.

சவுதி அரேபியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் சிறப்பு விசா “Bessa” எனப்படும் ஹஜ் புனிதப் பயணிகளுக்கான கட்டுப்பாடில்லா நடமாட்ட அனுமதி (Hajj Free Movement Pass) ஆகும். இதன் முக்கிய நோக்கம் இலங்கை ஹஜ் யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்குவதும், ஹஜ் சீசனின்போது வழிகாட்டிகள் மக்கா மற்றும் மதீனாவின் புனிதத் தலங்களைச் சுற்றி அவர்கள் சுதந்திரமாகச் சென்று வர உதவுவதும் ஆகும். அதாவது Guides, Administrators மற்றும் Medical Volunteerக்காக வழங்கப்படுபவை.

இதனை Consulate General Of Sri Lanka (Sri Lanka Hajj Mission) பின்வருமாறு பகிர்ந்தளிக்கிறது.

1. Hajj Tour Operators
45 பேரை வழிநடத்துபவர்களுக்கு 1 வீதம் வழங்கப்படும்.
உதாரணமாக ஒரு Hajj Agent 90 பேரை அழைத்துச் சென்றால் அவர்களுக்கு 2 Bessa Visa இலவசமாக வழங்கப்படும். இந்த வீசாவில் செல்வோர் பல இடங்களுக்கு கட்டுப்பாடுகள் இன்றி செல்ல முடிவதால் தம்மோடு வரும் ஹாஜிகளை இலகுவாக வழிநடாத்த (Guide) உதவியாக இருக்கும்.

02. இது தவிர மேலதிக Bessa Visaக்களை Medical மாற்றும் Administrative Volunteerஆக வருபவர்களுக்கு வழங்கப்படும். இவர்கள் Hajj Committeeஇனால் வரையறுக்கப்பட்ட Criteriaவினால் தெரிவு செய்யப்படுவர்.

ஆனால் இதில் பல குளறுபடிகள் மற்றும் அரசியல் தலையீடுகள் வருடாந்தம் நிகழ்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன..

இவ்வளவு காலமும் தலைநகரை சுற்றி குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இம்முறைகூட NPP அரசின் முஸ்லிம் பிரதிநிதிகள் இதில் 10ஐ கோரியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆக இந்த Bessa Visa என்பவை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வழங்கப்படுவதில்லை. அவை Guides, Medical மற்றும் Admistratirsக்காக வழங்கப்படுகிறது.

02.✅ இது தவிர சவூதி மன்னர் சல்மான் அவர்களால் உலகளாவிய ரீதியில் 100 நாடுகளைச் சேர்ந்த 1300 பேருக்கான தனது முழு செலவில் “மன்னர் விருந்தினராக” அழைக்கப்படுகிறார்கள். (இதற்கு மேலதிகமாக பலஸ்தீனத்துக்கு 1000)

இதன் நோக்கம் “இஸ்லாமிய உலகம் முழுவதும் உள்ள மத, கல்வி மற்றும் அறிவுசார் தலைவர்களுடன் உறவுகளை வலுப்படுத்தவும், நாகரிக மற்றும் மத உரையாடலை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி ஒரு தனித்துவமான மற்றும் மூலோபாய முயற்சி” என்று சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைசாசர்
Dr. Abdullatif Al Al-Sheikh விவரித்தார்.

இந்த வீசாவில் இலங்கைக்கு 20 கிடைத்ததாகவும் அதனை நாட்டின் கல்விசார் மற்றும் Diplomatsக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.

இதில் எந்த அடிப்படையில் நபர்கள்தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது சம்பந்தமாக விபரங்கள் இல்லை. உரிய தரப்பினரே விளக்கம் தரவேண்டும்.
#Ziyadaia
மேலதிக விவரங்கள்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button