மாபெரும் கஞ்சா கடத்தல் முறியடிப்பு – சந்தேக நபர் மனைவியின் பெயரில் வாங்கியிருந்த 10 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கக்கப்பட்டது

**எம்பிலிப்பிட்டியாவில் பெரும் கஞ்சா கடத்தல் – சந்தேக நபரின் 10 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்**
எம்பிலிப்பிட்டியாவைச் சேர்ந்த ஜே.ஏ.ஜயசிங்க என்று அழைக்கப்படும் ‘பதல ஹீன்மஹத்தயா’ என்பவரை, நாட்டில் மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பலின் தலைவராக பாதுகாப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இவருக்கு சொந்தமான சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இன்று (28) சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினால் முடக்கப்பட்டன.
இதில் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மருந்தகத்துடன் கூடிய மூன்று மாடி கட்டடமும், சந்திரிக்க வாவிக்கு முன்பாக அமைந்துள்ள விடுதியும் உள்ளடங்குகின்றன.
இந்த சொத்துக்கள் குறித்த நபரின் மனைவியின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தை வெளிப்படுத்த அவர்களால் முடியவில்லை.
இதனையடுத்து, குறித்த சொத்துக்கள் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (29) வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவின் பொறுப்பு துணைப் பொலிஸ் மா அதிபர் பவித்ர தயாரத்ன, அந்தப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ விஜயசேன மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜகருண ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொலிஸ் சார்ஜன்ட் 1679 விஜயசிங்க, 38201 சஞ்ஜீவ மற்றும் கான்ஸ்டபிள் 104576 விதானபத்திரன ஆகியோரும் இந்த நடவடிக்கையில் பங்காற்றியுள்ளனர்.



